கொள்ளு உடல் எடையைக் குறைக்க உதவும் தானியங்களில் ஒன்று. அத்தகைய கொள்ளுவை 1-2 டேபிள் ஸ்பூன் எடுத்து அதனை 1 டம்ளர் நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த நீரைப் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், உங்கள் உடல் எடை குறைவதைக் காணலாம்.


கருவேப்பிலை 10 முதல் 12 பச்சை இலைகளை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று தின்றுவரவும். அதுபோல் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு தினமும் காலையில் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வர, நீங்கள் எதிர்பாராத அளவில் உங்களின் உடல் எடையில் குறைவை காணலாம்.


இஞ்சியை இடித்து சாறு எடுத்து குடிக்க அது உடலில் உள்ள மெட்டபாலிச அளவை அதிகரிக்கிறது. உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவு அதிகமானால், கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலின் எடை குறையும். எனவே இஞ்சி சாற்றினை தினசாி ஒரு குடித்து வர உடலின் எடை குறையும்




Tags : weight, loss food, plan

0 $type={blogger}:

Post a Comment

 
Top